IT கம்பெனிகளில் அநியாயம் – 120 நிமிடங்கள் தான் அவகாசம் அதற்குள் ராஜினாமா செய்யணும்..!

0

கொரோனா வைரஸ் காரணமாக ஐடி நிறுவனங்களில் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் அடையத் தொடங்கி இருக்கிறது. எப்போதும் ஐடியில் தலை தூக்கும் லே ஆஃப் பூதம் தான் இந்த முறையும் ஐடி ஊழியர்களை பயமுறுத்தத் தொடங்கி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கம்..!

உலகம் முழுக்க, கொரோனா வைரஸ் பரவி மக்களின் உயிருக்கே பயத்தை ஏற்படுத்தி கொண்டு இருப்பதால் பல ஐடி நிறுவனங்களின் ப்ராஜெக்ட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன அல்லது ப்ராஜெக்ட்கள் ரத்து செய்யப்பட்ட்டு இருக்கின்றன. இதில் பெரிய ஐடி கம்பெனிகள் ஓரளவுக்காவது தாக்கு பிடித்துவிடும். ஆனால் சிறிய கம்பெனிகளுக்கு தான் சிக்கல் அதிகம்.

சிறிய IT கம்பெனிகளுக்கு சிக்கல்..!

சிறிய ஐடி கம்பெனிகளுக்கு நிறுவனத்தை நடத்த போதுமான வருவாய் வராது. இதனால் கம்பெனியை செயல்பட வைக்க, சிறிய ஐடி நிறுவனங்கள் பெரிய அளவில் அழுத்தத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த அழுத்தத்தைக் குறைக்க லே ஆஃப்-ஐ கையில் எடுத்து இருக்கின்றன சிறிய ஐடி கம்பெனிகள்.

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையைச் சுற்றி இருக்கும் பல நகரங்களில் ஐடி நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன. சமீபத்தில் புனே நகரத்தில் ஒரு சிறிய ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஏழு நபர்களை அழைத்து திடீரென ராஜினாமா செய்யச் சொல்லி இருக்கிறார்கள்.

ஃபேர் போர்டல் (Fareportal) என்கிற ஐடி சார்ந்த பிபிஓ (ITeS-BPO) நிறுவனம் குருகிராம் நகரத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் தன் 300 ஊழியர்களை திடுதிப்பென ராஜினாமா செய்யச் சொல்லி இருக்கிறார்களாம்.

கொடுமையான விஷயம்..!

இது குறித்து ஹரியானா மாநில தொழிலாளர் நலச் செயலருக்கு, ஐடி ஊழியர்கள் அமைப்பு (Forum of IT Employees) ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அந்த கடிதத்தில், ஐடி கம்பெனிகள் வெறும் 2 மணி நேரம் (120 நிமிடங்கள்) தான் ஊழியர்களுக்கு முன் அறிவிப்பு கால அவகாசம் (Notice Period) கொடுத்து இருக்கிறார்கள். இந்த குறுகிய கால் கட்டத்துக்குள் ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்களாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here