உலகளவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது..!

0

உலகில் இதுவரை 195 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

உயிர்கொல்லி கொரோனா..!

உலகையே ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

4 லட்சம் பேர் பாதிப்பு..!

உலகம் முழுவதும் இதுவரை 4,87,417 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1,17,582 பேர் குணமடைந்து உள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,026 ஆக உள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 7,503 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவத் தொடங்கிய நாடான சீனாவில் 3,287 பேர் உயிர் இழந்துள்ளனர். ஸ்பெயினில் 4,069 பேர் கொரோனா வைரசால் உயிர் இழந்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here