IPL லில் CSK மட்டும் ஜெயிச்சுகிட்டே இருக்க காரணம் என்ன..? ரகசியத்தை போட்டு உடைத்த டிராவிட்..!

0

ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் அணி என்றால் அது மிகை அல்ல. அந்த அணியின் வெற்றிக்கு காரணம் கேப்டன் தோனி என ஒரே வார்த்தையில் பலரும் பதில் சொன்னாலும் அந்த அணி நிர்வாகமும் ஒரு முக்கிய காரணம்.

CSK வெற்றிகள்..!

ஐபிஎல் தொடரில் உள்ள எட்டு அணிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரை பெற்றுள்ளது. மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே – ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத சீசனே இல்லை. அந்த வெற்றிப் பாதை குறித்து டிராவிட், “கிரிக்கெட் 2.0 – இன்சைட் டி20 ரெவல்யூஷன்” என்ற புத்தகத்தில் ஒரு பகுதியில் கூறி இருக்கிறார்.

CSK வெற்றிக்கு முக்கிய காரணகள்..!

தோனி, சுரேஷ் ரெய்னா, டிவைன் பிராவோ ஆகியோரை குறிப்பிட்டு, அது தான் சிஎஸ்கே அணி தொடர்ந்து சிறப்பான வீரர்களை தேர்வு செய்ய முக்கிய காரணம் எனவும் நான்கு இடங்களை நிரப்ப நிறைய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட அளவு மட்டுமே சிறந்த இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்களை சிஎஸ்கே அணி எளிதாக பெற முக்கிய காரணம் அந்த கோர் வீரர்கள் தான் என குறிப்பிட்டார் டிராவிட்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பின் தோனி மட்டுமல்ல தோனியை தேர்வு செய்த அதன் உரிமையாளர்கள் தான் என சுட்டிக் காட்டி உள்ளார் ராகுல் டிராவிட்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here