கொரோனா தடுப்பூசி குறித்து விவாதம் – பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!!

0

நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பது குறித்து பிரதமர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் முதல் எதிர் கட்சியினர் வரை பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி:

கொரோனாவிற்கான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் தீவிரமாக இருந்து வருகின்றன. அதே போல் இந்தியாவிலும் அடுத்த மார்ச் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதனை அடுத்து பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் தடுப்பூசிகளை பரிசோதனை செய்யும் மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

COVID-19 mRNA Vaccine and syringe

இந்தியாவில் மட்டும் மூன்று தடுப்பூசிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. அவை கோவாக்சின், சைக்கோவ்-டி மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்துகள் ஆகும். வெளிநாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசிகள் வந்துள்ளதால் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான ஹர்ஷ் வர்தன், ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் மேலும் பலர் கலந்து கொண்டனர். இவர்களை தவிர்த்து எதிர் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும்!!

இந்த கூட்டத்தில் தடுப்பூசிகளை எப்போது இறக்குமதி செய்யலாம்? யாருக்கு முதலில் வழங்க வேண்டும்? எந்த அடிப்படையில் தடுப்பூசிகளை பெறுபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்? போன்ற முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் பலரும் தங்களது கருத்துக்களை பிரதமரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here