ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!!

0
RBI Governor
RBI Governor

அடுத்த ஆண்டு நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ எனப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். அதே போல் குறுகிய கால கடன்களுக்குக்கான ரெப்போ வட்டி விகிதமும் இந்த ஆண்டு மாற்றப்படாமல் இருக்கும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பங்குச்சந்தை வீழ்ச்சி:

கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்தது. வருடத்தின் இறுதிக்கு வந்துள்ளதால் பலரும் நாட்டின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு எந்த அளவில் இருக்கும் என்று கணித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் சில முக்கியமான அறிவிப்புகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் விளக்கியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் தெரிவித்து இருப்பதாவது, “கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் அளவு 2000 ஆயிரம் ஆக இருந்தது, அது தற்போது 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜனவரி மாதத்தில் இருந்து அமலில் வரும். முதல் முறையாக சென்செஸ் 45,000 புள்ளிகளை தொட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது காலாண்டில் (Q3) 0.1 சதவீதமாக வளர்ச்சி அடையும். அதே போல் நான்காவது காலாண்டில் (Q4) 0.7 சதவீதமாக வளர்ச்சியினை காணும்”

17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

“அதே போல் ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகையான ரெப்போ வட்டியின் அளவினை மாற்றாமல் வைத்துள்ளது. பின்பற்றுபட்டு வந்த அதே 4 சதவீத வட்டி விகிதம் தொடரும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் எம்.பி.சி எனப்படும் நாணயக் கொள்கைக் குழு இது குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here