புரேவி புயல் எதிரொலி – 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

0

தெற்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புரேவி புயலாக மாறி கரையை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

புரேவி புயல் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே கரையை கடந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தற்போது நீண்ட நேரமாக நகராமல் பாம்பனில் இருந்து 70 கிமீ தொலைவிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 40 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 6 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

cyclone formation in bay of bengal latest updates
cyclone formation 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 3 மணிநேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நிலை கொண்டு உள்ளதால், காற்றின் வேகம் 55 முதல் 65 கிமீ வரையிலும், அதிகபட்சமாக 75 கிமீ வரையிலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த 6 மணிநேரத்திற்கு தஞ்சை, திருவாரூர், நகை, மயிலாடுதுறை, நெல்லை, குமரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

600 இளம் பட்டதாரிகளை பணியமர்த்த திட்டம்!!

இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும், அத்தியாவசிய கோப்புகள், சான்றிதழ்களை பத்திரமாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 36 செமீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here