அரியர் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அண்ணா பல்கலை வெளியீடு!!

0
Anna univ
Anna univ

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வுகளின் முடிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் இன்ஜினியரிங் அரியர் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் 4 வளாகங்களில் பயிலும் மாணவர்கள் தங்களது அறிவியல் பாடப்பிரிவில் வைத்துள்ள அரியர் தேர்வுகளுக்கான கட்டணத்தை வரும் டிசம்பர் 20ம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரியர் தேர்வு கட்டணங்களை மாணவர்கள் டிசம்பர் 10ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

arrear students

இதன்படி அரியர் மாணவர்களுக்கு ஆன்லைனில் விரைவில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சென்னை பல்கலை, மதுரை காமராஜ் பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை ஆகிய மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அரியர் முடிவுகளை ஏற்கனவே வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 2012 முதல் 2018ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கு இன்ஜினியரிங் பாடப்பிரிவில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் இத்தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here