600 இளம் பட்டதாரிகளை பணியமர்த்த திட்டம் – வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு!!

0

இயற்கை வளங்களை சார்ந்து வணிகம் செய்யும் மிக பெரிய நிறுவனமான “வேதாந்தா” தற்போது 600 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை புதிதாக பணி அமர்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலத்திற்கு பின் பலருக்கும் இது வேலை வாய்ப்பினை நல்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை வீழ்ச்சி:

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால், பலரும் வேலை வாய்ப்பினை இழந்தனர். அது மட்டும் இல்லாமல் நாட்டின் பங்கு சந்தையும் பெரும் அளவு வீழ்ச்சி அடைந்தது. இதனால் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் கூட செய்து அதிர்ச்சி அளித்தனர். தற்போது கொரோனா பரவல் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி உள்ளதால் நிறுவனங்கள் திறக்கப்பட்டு புதிதாக ஆட்களை பணியமர்த்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் பல்வேறு இயற்கை வளங்களை சார்ந்து வணிகம் செய்யும் பெரிய நிறுவனமான “வேதாந்தா” நிறுவனம் நடப்பு ஆண்டிற்காக 600 க்கும் மேற்பட்ட இளம் பட்டதாரிகளை பணி அமர்த்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளை கேம்பஸ் இன்டெர்வியூ வாயிலாக தேர்தெடுக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடாது??

இது குறித்து அந்த நிறுவனத்தின் குழும தலைவர் மது ஸ்ரீவட்சன் கூறுகையில், “எங்கள் நிறுவனத்திற்காக பட்டதாரிகளை தேர்ந்தெடுக்க உள்ளோம். அவரகள் அனைவரும் கேம்பஸ் இன்டெர்வியூ வாயிலாக தான் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த கடினமான காலத்தில் கூட கடந்த ஆண்டின் பேட்ஜ்கள் ஆன்லைன் முறையில் சரியான நேரத்தில் செய்யப்பட்டது. அதனை நாங்கள் முதலீடாக தான் பார்க்கிறோம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here