72வது குடியரசு தினவிழா – சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர்!!

0

நம் நாட்டின் 72 வது குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். கொரோனா பரவலுக்கு பின்பு இந்தியா வரும் முதல் வெளிநாட்டு தலைவர் இவர் தான்.

குடியரசு தினவிழா:

இந்தியா அரசியலமைப்பு சட்டம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒவ்வொரு ஆண்டு கொண்டாட்டத்தின் போதும் சிறப்பு விருந்தினர் நம் நாட்டு சார்பில் அழைக்கப்படுவார். கடந்த ஆண்டு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சனை தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பினை தற்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்தியாவுக்கு இங்கிலாந்து தூதரக வட்டாரம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு பின் இந்தியாவுக்கு வருகை புரிய இருக்கும் வெளிநாட்டு தலைவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது திராட்சை ரசம், அப்பம் வழங்கலாம்!!

இதன் மூலமாக அவர் 72 வது குடியரசு தின விழாவில் பங்கேற்பது உறுதி ஆகியுள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி கொடி ஏற்றவுள்ளார். இவர்களை தஹவிர்த்து பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here