வெள்ளை நிற உடையில் தேவதையாக காட்சி அளிக்கும் நயன்தாரா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

தமிழில் தற்போது வரை லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கும் நயன் தற்போது வெள்ளை நிற உடையில் தேவதையை போல காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

நயன்தாரா

மலையாள பெண்ணான நயன்தாரா முதலில் நடித்தது என்னவோ தமிழில் தான். ஆரம்ப காலத்திலேயே அவரை மக்களுக்கு பிடித்து போனது என்றே சொல்லலாம். குழந்தை முகமாக தளுக் மொழுக் என இருந்த நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நயன்தாராவின் நிஜ பெயரே டயானா தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பத்தில் திரையுலகில் கால்பதிக்க கஷடப்பட்டிருந்தாலும் இவரின் விடா முயற்சியால் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார் நயன். மேலும் நயன்தாராவிற்கம் சிம்புவுக்கும் இடையே காதல் இருந்ததாகவும் கிசுகிசுக்கள் வெளியாகின. நாளடைவில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்ததாகவும் பேசப்பட்டது.

ஆரம்பத்தில் சின்ன சின்ன நடிகர்களுடன் நடித்தாலும் தற்போது நடித்தாலே அது முன்னணி நடிகர்களுடன் தான் என்ற அளவிற்கு இவரது வளர்ச்சி உள்ளது. மேலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பிரபு தேவாவிற்கும் இவருக்கும் இடையில் ஏதோ உறவு இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில் பல பிரச்சனைகளும் உருவானது. பிரபு தேவாவின் மனைவி நயன்தாரா மீது வழக்கு தொடரவும் செய்தார்.

‘நான் எந்த நடிகருடனும், நெருக்கம் காட்டி நடித்ததே கிடையாது’!!

இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த நயன்தாரா தற்போது திரையுலகையே கலக்கி வருகிறார். தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன் அவரின் பிறந்தநாளை கொண்டாட கோவா சென்றிருந்தார். அந்த புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நயன்தாராவின் புகைப்படத்தில் வெள்ளை நிற உடையில் தேவதை போலவே காட்சியளிக்கிறார் என்றே சொல்லலாம். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here