ஜாதி அடிப்படையில் தெருக்களின் பெயர்கள் – உடனே மாற்ற மாநில அரசு முடிவு!!

0

ஜாதிகளின் அடிப்படையில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் பெயர்களை நீக்க மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜாதியை மையமாக கொண்ட தெருக்களின் பெயரை நீக்க மஹராஷ்டிராவில் பரிந்துரை செய்யப்பட்டதன் பேரில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க அம்மாநில அரசு முடிவுவெடுத்துள்ளது.

ஜாதி தெருக்களின் பெரிய நீக்கம் :

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பான்மையான சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு அந்த ஜாதியின் பெயரிலே தெருக்கள் இருந்தன. இதனை தடுக்கும் விதமாக அம்மாநில அரசு ஜாதி அடிப்படையிலான பெயர்களை நீக்கி அந்த பகுதிகளுக்கு பீம் நகர், ஜோதி நகர் என புதிய பெயர்களை சூட்டி உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து, அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை வகித்த மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது, இந்த ஜாதி பெயர் நீக்க முடிவு சமுதாயத்தில் ஒற்றுமையை உண்டாக்கும், மேலும் மக்கள் அனைவரும் வேற்றுமை இன்றி ஒற்றுமையோடு அனைவரிடத்திலும் பழகுவார்கள். இது அனைத்து ஜாதி மக்களுக்குள்ளும் ஒற்றுமையை வலுப்படுத்தும் என தெரிவித்தார். மேலும், ஜாதிய முறையில் தெருக்களை பிரிப்பதை இதன் மூலம் கைவிடலாம்.

600 இளம் பட்டதாரிகளை பணியமர்த்த திட்டம்!!

ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் யார் மீதும் பாகுபாடு காட்டப்பட கூடாது என்றும், சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமம் தான் என்றும், மதிப்புடன் வாழ எல்லா மக்களுக்கும் சம உரிமை உண்டு. இப்படி, ஜாதி முறையை படிப்படியாக தான் ஒழிக்க வேண்டும் என்றும் சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ் முண்டே கூறியுள்ளார். இந்த தீவிரமான முடிவு மக்களின் மத்தியில் உள்ள ஜாதிய பார்வையை மாற்றும் எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here