கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தது – சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு!!

0
covid-19 coronavirus vaccination concept

நாடுமுழுவதும் வரும் 17 ம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதை ஒட்டி இன்று காலை புனேவிலிருந்து தமிழகத்திற்கு கோவிஷீல்டு மருந்துகள் வந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகள்

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் வருகிற 17 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்படவுள்ளன. இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பு மருந்து இன்று காலை புனேவிலிருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானம் மூலம் வரவுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயிலிருந்து இதற்காக நாட்டின் 13 பகுதிகளுக்கு விமானம் மூலம் மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கனமழை எச்சரிக்கை – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

ஏற்கனவே அறிவித்துள்ளது போல இந்த தடுப்பூசி கொரோனா முன்கள பணியாளர்களுக்கு போடப்பட உள்ளது. ஆரம்பக்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன. மத்திய அரசு, சீரம் நிறுவனத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் படி ஒரு தடுப்பு மருந்து ரூ 200 என்ற பணமதிப்பின் அடிப்படையில் தடுப்பூசி மருந்துகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here