நாமக்கல்லில் ஹனுமான் ஜெயந்தி விழா – பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சநேயர்!!

0

நாமக்கல்லில் புகழ்பெற்ற ஹனுமான் கோவில் உள்ளது. இன்று ஹனுமான் ஜெயந்தி என்பதால் அந்த கோவில் வடைமாலை அணிவித்து ஹனுமனை சிறப்பித்தனர். மேலும் ஹனுமனை தரிசிக்க பக்தர்கள் அலைமோதி வருகின்றனர்.

ஹனுமான் ஜெயந்தி:

ஹனுமனை நினைவு கூறும் நாளான இன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நாமக்கல்லில் புகழ் பெற்ற ஹனுமான் கோவில் உள்ளது. அங்கு இன்று ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. 18 அடி உயரத்தில் நின்று ஹனுமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஹனுமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் அமாவாசை தினத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அதன்படி இன்று ஹனுமான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை முன்னிட்டு நாமக்கல் ஹனுமான் கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹனுமானுக்கு 1 லட்சத்து 8 எண்ணிக்கைகளை கொண்ட வடைமாலையை அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது. இது இன்று காலை 5 மணி அளவில் நடைபெற்றுள்ளது. மேலும் இன்று காலை 11 மணி வரை வடை மாலை சாத்தியபடியும் அதன்பிறகு ஹனுமானுக்கு நல்லெண்ணெய், சீயக்காய், திரவியம், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், போன்றவற்றை கொண்டு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு தீபாராதனை காட்டப்படும். மேலும் மதியம் 1 மணி அளவில் தங்க கவசம் சாத்தப்பட்டு பூஜை நடைபெறும்.

கனமழை எச்சரிக்கை – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தற்போது கொரோனா காலம் என்பதால் ஹனுமானை தரிசிக்க ஆன்லைன் மூலம் சில பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் சுமார் 750 பக்தர்களும் மற்றும் இலவச தரிசனத்தில் சுமார் 750 பக்தர்களும் மொத்தமாக 1 மணி நேரத்திற்கு சுமார் 1500 பக்தர்கள் ஹனுமானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பக்தர்களின் வருகை அதிகமாகியுள்ளதால் நாமக்கல் கோட்டை சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள போக்குவரத்துகளை வேறு வழியில் மாற்றியமைத்துள்ளனர் நாமக்கல் காவல்துறையினர். ஹனுமனை தரிசிக்க வரும் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்துவிட்டு செல்வதற்காக நாமக்கல் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here