நாட்டின் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் இன்று – 1 வருடம் நிறைந்தும் தீராத பாதிப்பு!!

0

கடந்த 2019 ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் கேரளாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று ஆகும். ஒரு ஆண்டுகள் கடந்த பின்பும் கேரளாவில் வைரஸுக்கு எதிரான போர் இன்றும் கூட குறையவில்லை.

கொரோனா தொற்று

கடந்த 2020 ம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதி கேரளா திரிசுரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் கல்வி பயின்று கேரளாவிற்கு திரும்பி வந்தார். கேரளா திரும்பி வந்த அந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது ஜனவரி 30 ம் தேதி உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி சீனாவிலிருந்து திரும்பிய மேலும் மூன்று மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அவர்களில் ஒருவருக்கு ஜனவரி 30 ம் தேதி தொற்று உறுதிசெய்யப்பட்டது.

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீக்கு ஏற்பட்ட விபத்து – பதட்டத்தில் ரசிகர்கள்!!

தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்து பிப்ரவரி மாதம் அவர் வீட்டிற்கு மீண்டுமாக அனுப்பப்பட்டார். அதன் பின்பு தான் சீனாவிலிருந்து திரும்பியவர்கள் மூலம் கொரோனா தொற்று பலருக்கு பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மார்ச் மாதம் முதல் கேரளாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் கொரோனாவிற்கு எதிரான போரை தொடங்கினார்கள். மாதங்கள் பல ஓடி ஒரு வருடம் ஆன பின்னும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது கொரோனா பரவல் இந்தியாவில் குறைந்து இருந்தாலும் மக்களுக்கு கொரோனா பற்றிய எச்சரிக்கையும் பாதுகாப்பும் இருக்கவேண்டியது அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here