மகாத்மா காந்தியின் நினைவு தினம் – குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!!

0

இன்று நமது தேச தந்தையான மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம் ஆனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டின் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மகாத்மா காந்தி:

நமது நாட்டின் தேசத்தந்தையான மகாத்மா காந்தி இதே தினத்தில் கடந்த 1948ம் ஆண்டில் சுட்டு கொல்லப்பட்டார். இதனை முன்னிட்டு இந்த தினத்தை நாம் தியாகிகள் தினமாக போற்றி வருகிறோம். இந்தியாவிற்கு விடுதலை கிடைத்ததற்கு காந்தி தான் முக்கிய காரணம். மேலும் அஹிம்சை வழியில் போராடி நமது நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கி தந்துள்ளார். தற்போது இவரது நினைவு தினத்தை முன்னிட்டு இவரது உருவ சிலைகள் அனைத்திற்கும் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவரது நினைவு இடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தற்போது இவரது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் இவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை தெரிவிக்கப்பட்டது. தற்போது ராஜ்காட்டிலுள்ள அவரது நினைவிடத்திற்கு நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சென்று தங்களது மரியாதையை செலுத்தினர்.

குடியரசுத்தலைவர், பிரதமர் ட்வீட்:

தற்போது காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் கூறியதாவது, இந்த நாளில் உயிர் தியாகம் செய்த காந்திக்கு இந்தியா சார்பில் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அமைதி, அஹிம்சை, பண்பு போன்ற அவரின் நல்ல கொள்கைகளை நாம் கடைபிக்க வேண்டும். அவரின் பாதையை நாம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிதித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீக்கு ஏற்பட்ட விபத்து – பதட்டத்தில் ரசிகர்கள்!!

இதுகுறித்து பிரதமர் கூறியதாவது, காந்தியின் கொள்கைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். மேலும் இந்த தியாகிகள் தினத்தன்று இந்தியர்களின் நல் வாழ்வுக்காக தனது உயிரை விடுத்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நாம் நினைவு கூறுகிறோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here