டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.., களமிறங்கும் No.1 Show!!

0
டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.., களமிறங்கும் No.1 Show!!
டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.., களமிறங்கும் No.1 Show!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோவின் நான்காவது சீசன் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த ஷோவின் மெயின் பில்லராக இருந்து வருபவர்கள் தான் கோமாளிகள். அந்த வகையில் பாலா, புகழ், மணிமேகலை, சுனிதா, சிவாங்கி என தொடர்ந்து கோமாளிகளாக இருந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்கள் அடிக்கும் அட்ராசிட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி வருகின்றன. மேலும் இந்த ஷோவின் மூலமாக தான் பாலா, புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் குக் வித் கோமாளி ஷோவின் நான்காவது சீசன் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சம்முவின் சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

தற்போது கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதி நாட்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஷோ முடிவடைந்த பின்னர் குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கும் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் பிக்பாஸ் முடிவடைந்த பின்னரும் மக்களை ஈர்க்க வேண்டும் என்று விஜய் டிவி இந்த திட்டத்தை தீட்டியதாக சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here