தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்., ராஜஸ்தானில் நடந்த கோர விபத்து! நெஞ்சை உலுக்கும் வீடியோ உள்ளே!!

0
தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்., ராஜஸ்தானில் நடந்த கோர விபத்து! நெஞ்சை உலுக்கும் வீடியோ உள்ளே!!
தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்., ராஜஸ்தானில் நடந்த கோர விபத்து! நெஞ்சை உலுக்கும் வீடியோ உள்ளே!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி அருகே, சென்று கொண்டிருந்த சூரியநகரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

திடீர் விபத்து:

ராஜஸ்தான் மாநிலத்தில், பாந்த்ரா டெர்மினஸ் என்ற இடத்தில் இருந்து, புறப்பட்ட சூரியநகரி எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. எக்ஸ்பிரஸ் ரயில் என்பதால், பெரும்பாலான பயணிகள் இதில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த ரயில் திடீரென ராஜஸ்தான் பாலி அருகே, தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 8க்கும் மேற்பட்ட பெட்டிகள், ராஜ்கியாவாஸ் – போமத்ரா என்ற தண்டவாள பிரிவுக்கு இடையே அதிகாலை 3.27 மணிக்கு திடீரென தடம் புரண்டு இந்த கொடூர சம்பவம் நடந்தது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(02.01.2023)-முழு விவரம் உள்ளே!

இது குறித்து பேசிய வட மேற்கு ரயில்வே இயக்ககம், இந்த கோர விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஜோத்பூர் நகரில் இருந்து நிவாரண பணிகளுக்காக ரயில் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். விரைவில் உயர் அதிகாரிகள் இந்த சம்பவத்தை நேரில் பார்வையிடுவதற்காக, இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி, வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here