சம்முவின் சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

0
சம்முவின் சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!
சம்முவின் சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியான யசோதா திரைப்படம் கிட்டத்தட்ட 60 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து சாகுந்தலம், குஷி மற்றும் ஆராதய போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் சாகுந்தலம் திரைப்படத்தை, காளிதாஸ் எழுதிய புராண கதையான சாகுந்தலத்தை மையமாக வைத்து இப்படத்தை ருத்ரமாதேவி படத்தின் இயக்குனர் குணசேகரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரமான சாகுந்தலம் கேரக்டரில் நடிக்க, மலையாள நடிகர் தேவ் மோகன் இணைந்து நடித்துள்ளார். மேலும் வரலாற்று புராண காதல் காவியமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது.

ஹவுஸ் மேட்ஸை கதறவிட்ட பிக் பாஸ்., யப்பா, ஒருத்தர் முகத்துலயும் ஈ ஆடல! வச்சு செஞ்சுட்டாரு!!

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது அழகிய காதல் ஓவியமான சாகுந்தலம் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here