ஹெலோ சீனியர் நல்லா பார்த்துப்பீங்களா?? அஸ்வினை வச்சு செய்யும் ஷிவாங்கி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வேற லெவெலில் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. தற்போது வித்தியாசமான பல கெட்டப்களுடன் குக் வித் கோமாளி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

போன வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வேற லெவல் கலாட்டா என்றே சொல்லலாம். எல்லாவற்றிலும் முழுமையாக இருப்பது என்னவோ ஷிவாங்கி, மணிமேகலை, புகழ் காமெடி தான். ஷிவாங்கி டோராவாகவும், மணிமேகலை சோட்டா பீமாகவும், புகழ் ஷின்சானாகவும் வேடமிட்டு கலக்கினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ஒவ்வொரு சீனும் ரசிக்கும் படியாக இருந்து வந்தது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு இப்படி டிஆர்பி எகிறிக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். வாராவாரம் எப்படி கான்செப்ட் இப்படி யோசிக்க முடியும் என்று தான் தெரியவில்லை.

இந்த செட்டுக்கே பல ரசிகர்கள் உள்ளனர். அதிலும் ஷிவாங்கி அஸ்வின் காம்போ சொல்லவே தேவையில்லை. இந்த வாரத்தில் படங்களில் இருக்கும் கெட்டப்பில் கோமாளிகள் வருகின்றனர். ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படத்தில் சமந்தா ஸ்கூல் கெட்டப்பில் ஷிவாங்கி வருகிறார்.

ரசிகர்களுக்கு செம்பருத்தி கார்த்திக் விடுத்த எச்சரிக்கை – வைரலாகும் பதிவு!!

மாரி கெட்டப்பில் புகழ் வந்து கலக்குகிறார். இந்த வாரத்தில் ஷிவாங்கி பவித்ராவுடன் ஜோடி சேருகிறார். மேலும் சமந்தா ஸ்கூல் கெட்டப்பில் வரும் ஷிவாங்கி அஸ்வினை பார்த்து நல்லா பார்த்துபிங்களா சீனியர் என்று கேட்க அஸ்வினே ஷாக் ஆகிறார். மேலும் இந்த ப்ரோமோ வை பார்த்த சிரிப்பையும் அடக்கமுடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு பின்னி இருக்கின்றனர் கண்டெஸ்டண்ட்ஸ். இந்த வாரத்தில் குழந்தைகள் விளையாடும் மினியேச்சர் பாத்திரங்களில் சமைக்க வேண்டும். புதிதாக வந்த ரித்திகாவும் தனது பன்ச்சால் பாலாவையே அலற விடுகிறார். இந்த வார ப்ரோமோ அல்டிமேட் என்றே சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here