ட்விட்டரால் ஏற்பட்ட அதிருப்தி – “கூ” வலைத்தளத்தில் குவிந்த 9 லட்சம் பயனாளர்கள்!!

0

தொடர்ந்து சமூகவலைத்தளமான ட்விட்டரில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பலரும் இந்திய நிறுவனம் உருவாக்கிய “கூ” என்ற வலைத்தளத்தை நாடினர். அந்த வகையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 9 லட்சம் பயனாளர்களை “கூ” நிறுவனம் பெற்றுள்ளது.

ட்விட்டரால் அதிருப்தி

கடந்த சில மாதங்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இன்னும் சரியாய் முடிவினையும் அறிவிப்பினையும் மத்திய அரசு வெளியிடவில்லை. நாட்டில் நிலை இப்படியாக இருக்க பல வெளிநாட்டவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அனைவரும் தங்களது ஆதரவினை சமூகவலைத்தளமான ட்விட்டர் வாயிலாக தெரிவித்தனர்.

ரசிகர்களுக்கு செம்பருத்தி கார்த்திக் விடுத்த எச்சரிக்கை – வைரலாகும் பதிவு!!

இதனை பலரும் கண்டித்தனர். மத்திய அரசும் பலரது ட்விட்டர் கணக்குகளை முடக்க ட்விட்டரின் இந்திய நிறுவனத்திடம் அறிவுறுத்தியது. அந்த வகையில் ட்விட்டர் நிறுவனமும் மத்திய அரசின் கோரிக்கையினை ஏற்று சிலரது கணக்குகளை முடக்கியது. ஆனால், சிறிது நேரத்தில் அதனை திரும்ப பெற்றது. இதனால் மிகவும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு 69A சட்டப்பிரிவின் கீழ் இந்தியாவில் ட்விட்டரை தடை செய்ய இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியான அதிருப்திகள் ட்விட்டர் மேல் இருந்ததால் பலரும் பல வித சமூகவலைத்தளங்களை நாடினர். இந்தியாவின் பெங்களூருவில் வடிவமைக்கப்பட்டுள்ள மைக்ரோ பிளாகிங் மற்றும் சமூக வலைத்தளமான கூ (KOO) அப்ளிகேஷனை மத்திய அரசு துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் கடந்த 5 நாட்களில் மட்டும் “கூ” வலைதளத்தில் 9 லட்சம் பயனாளர்கள் இணைத்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், இதனை பயன்படுத்த பலரும் அச்சம் தெரிவிப்பதற்காக காரணம் இந்த நிறுவனத்தின் முதலீடு ஒரு சீன நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளது என்பதே ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here