அஸ்வினிடம் ‘வலிமை’ பற்றி கேட்ட மொயின் அலி – வைரலாகும் வீடியோ!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று முடிந்தது. இதில் இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலியிடம் தல ரசிகர்கள் வலிமை படம் குறித்த அப்டேட் கேட்டுள்ளனர்.

வலிமை:

கடந்த சில நாட்களாகவே தல ரசிகர்கள் பல பொது இடங்களில் வைத்து பல பிரமுகர்களிடம் வலிமை படம் குறித்து அப்டேட் கேட்டு வருகிறார்கள். மேலும் நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தால் தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மேலும் நேற்றைய போட்டியில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். போட்டியின் போது இங்கிலாந்து அணியின் மொயின் அலி பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைப்பு – மாநில அரசு அதிரடி!!

அப்போது அவரிடம் தல ரசிகர்கள் ‘அலி ஜி வலிமை அப்டேட்’ என்று கேட்டுள்ளனர். ஆனால் இவர்கள் பேசியது அவருக்கு புரியவில்லை. தற்போது போட்டி முடிந்த பின்பு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது யூடியூப் சேனல் மூலம் தனது ரசிகர்களிடம் பேசினார். அப்போது அவர் வலிமை படம் அப்டேட் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, மொயின் அலி என்னிடம் வந்து வலிமை என்றால் என்ன என்று கேட்டார் என்று கூறினார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here