இந்த வார குக் வித் கோமாளியில் கலந்துகொள்ளாத புகழ் – இது தான் காரணமா??

0
cook with comali

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக அதிகமான ரேட்டிங்குடன் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் புகழ் இந்த வாரம் வெளியான எபிசோடின் ப்ரோமோவில் இல்லை.

புகழ் இல்லை

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான ஷோ குக் வித் கோமாளி. சமையலில் புதுமை கலந்த இந்த ஷோவில் நட்சத்திர குக்குகளுடன் விஜய் டிவியின் பிரபலங்கள் கோமாளிகளாக கலக்கிவருகின்றனர். இந்த ஷோவின் முதல் சீசன் மெஹா ஹிட் அடித்த பின்பு அதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இது மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கிறது என்பது மிகையாகாது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் கோமாளிகளாக வரும் புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கியின் லூட்டிகள் பெரிதும் மக்களால் கவரப்பட்டு வருகின்றனர். தற்போது வெளியான இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். மேலும் கோமாளியாக வரும் புகழ் இந்த எபிசோடில் கலந்துகொள்ளவில்லை.

அஜீத் நடிக்கும் வலிமை படத்தில் ஒரு கதா பாத்திரத்தில் புகழ் நடித்து வருவதால் இந்த வார எபிசோடில் அவர் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது கண்டிப்பாக புகழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். பவித்ராவுடன் புகழ் செய்யும் குறும்புத்தனங்கள் இந்த வாரம் இருக்காது என்பது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு வருத்தமளிக்க கூடிய செய்தி. எனினும் புகழின் அட்டகாசங்களை அடுத்த வார எபிசோடுகளில் எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here