‘எகிறி குதித்தேன்’ பாடலுக்கு அஸ்வினுடன் நடனமாடும் ஷிவாங்கி – வேற லெவலில் வைரலாகும் ப்ரோமோ!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது அமானுஷ்ய கெட்டப்பில் கோமாளிகள் வந்து அசத்தி வருகின்றனர். ஷிவாங்கி அனபெல்லா வேடத்தில் வந்து பட்டையை கிளப்புகிறார். தற்போது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது பல கலாட்டாக்களுடன் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ப்ரோமோக்கள் வெளியான நிலையில் அனபெல்லா கெட்டப்பில் ஷிவாங்கி வந்து அனைவரையும் சிரிக்க வைத்தார். மேலும் அஸ்வினுக்கே இந்த வாரமும் ஜோடியாக உள்ளார். இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் பல புதுமையான கான்செப்ட் கொடுக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரண்டு கிளாஸ் ஜூஸ் கையில் வைத்துக்கொண்டு கீழே விழாமல் நடக்க வேண்டும். அஸ்வினை சரத் வந்து சிரிப்பு மூட்ட கீழே விட்டு விடுகிறார். கீழே விட்டவர்கள் 10 நிடங்கள் சமையலை விட்டு அங்கு குதிக்க வேண்டும். ஷிவாங்கி கிளாஸை கீழே போட அதனால் அஸ்வின் குதிக்க செல்கிறார். இதனை பார்த்த ஷிவாங்கியும் அஸ்வினுடன் சேர்ந்து குதிக்க ‘எகிறி குதித்தேன்’ பாடலை ஒலிக்கிறது.

‘இந்தியர்கள் அமெரிக்காவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்’ – அதிபர் ஜோ பைடன் புகழாரம்!!

இருவருக்கும் அந்த பாடல் பொருந்தியும் போகிறது. அடுத்தடுத்து பாலா பேய் வேடத்தில் நடிக்கும் காட்சிகள் அபாரம் என்றே சொல்லாம். அடுத்ததாக புகழ் மற்றும் ஷகிலா காம்போ தான் வேற லெவல். சுனிதா வழக்கம் போல அஸ்வினை கவர பல டயலாக் வந்து பேச ஷிவாங்கி காண்டாகிறார். இந்த வாரமும் மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி படு மாஸாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here