‘இந்தியர்கள் அமெரிக்காவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்’ – அதிபர் ஜோ பைடன் புகழாரம்!!

0

நாசா விஞ்ஞானிகள் குழுவுடன் நடத்திய காணொளி ஒன்றில், அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அமெரிக்காவின் முன்னேற்ற பாதைக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். கடந்த மாதம் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், விண்கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது. இதைத்தொடர்ந்து நாசா விஞ்ஞானிகள் குழுவுடன் அதிபர் ஜோ பைடன் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த சந்திப்பில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை குறித்து வெகுவாக புகழ்ந்துள்ளார். காணொளி மூலம் பேசிய ஜோ பைடன், அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் செயல்பாட்டின் கீழ் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்வாதி மோகன், வினய் ரெட்டி ஆகியோரை குறிப்பிட்டு பேசினார். மக்கள் பணிக்கு அதிகஅளவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

‘மானநஷ்ட வழக்கு தொடருவேன்’ – தயாரிப்பாளருக்கு நடிகர் விமல் எச்சரிக்கை!!

தொடர்ந்து தெற்கு ஆசியாவை சேர்ந்த அதிகளவு பேர் மக்கள் பணியில் ஈடுபட்டு இருப்பது, மேலும் பல தெற்கு ஆசியர்களை பொதுப்பணிக்கு ஊக்குவிக்கும் என்பதில் அச்சம் இல்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற 50 நாட்களுக்குள்ளாக முக்கியமான இலாகாக்களில் 55 இந்தியர்களை பணியில் அமர்த்தியுள்ளார். அதில் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here