50% மாணவர்களுடன் கல்லூரிகளை திறக்க அனுமதி – நெறிமுறைகளை வெளியிட்டது யுஜிசி!!

0
college students
தமிழக மாணவர்களின் இந்த நிலைமைக்கு எப்போ தான் முடிவு? பொது மக்கள் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!!

கொரோனா காரணத்தினால் கடந்த 8 மாத காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் புது டெல்லியில் 50% மாணவர்களுடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவியது. அதனால் நிறைய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணத்தினால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்கின்றனர். இந்நிலையில் புது டெல்லியில் 50% மாணவர்களுடன் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் திறக்கலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மாநில பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி அந்தந்த மாநில அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற நெறிமுறைகளுடன் கல்லூரிகள் திறக்க வேண்டும். கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதியை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் கல்லூரி மற்றும் விடுப்புகளில் தங்க அனுமதி இல்லை என்று யுஜிசி அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரோக்ய சேது செயலியை தங்களது போனில் பதிவு செய்ய ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் சொல்ல வேண்டும். ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளின் முதுகலை மாணவர்களை முதலில் கல்லூரிக்கு வரவழைக்கலாம். ஏனெனில் அவர்களின் எண்ணிக்கை மட்டுமே குறைவாக உள்ளது. எந்தவொரு கல்வி நிறுவனமும், மாணவர்களை 50% மேல் அனுமதிக்கக் கூடாது. புதிய வழிகாட்டுதலின்படி, வீட்டில் தங்கி ஆன்லைனிலும், மாணவர்கள் படித்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here