‘பேட்டி கொடுக்கும்போது குடிக்காம பேசுனா நல்லா இருக்கும்’ – வனிதாவை பங்கமாக கலாய்த்த ரவீந்தர்!!

0
ravindar and vanitha

வனிதா, பீட்டர் பாலுக்கு இடையே ஏற்பட்ட பிரேக்கப் விவகாரம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதில் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வீடீயோக்களை வெளியிட்டு வந்தனர். மேலும் வனிதா பீட்டர் பாலிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கும் வனிதா பதிலடி கொடுத்துள்ளார். தற்போது தயாரிப்பாளரான ரவீந்தர் வனிதாவை, வீடியோ கொடுக்கும் போது குடிக்காமல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி பங்கமாக கலாய்த்துள்ளார்.

வனிதா பீட்டர் பால்

வனிதா பீட்டர் பால் என்பவரை லாக்டவுன் சமயத்தில் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. மேலும் இதனால் பல சண்டைகளும் ஏற்பட்டது. வனிதாவுக்கு கல்யாணம் ஆன நாளில் இருந்து இது வரை பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். சோசியல் மீடியாவிலேயே பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் சூர்யா தேவி வனிதா இடையே பல மோதல்கள் ஏற்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

vanitha peter paul

சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களை திறந்தாலே வனிதா பிரச்சனையாக மட்டுமே இருந்தது. இந்நிலையில் பீட்டர் பாலுடன் திரும்ப இணைய வனிதா கெஞ்சி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு பதிலடி தரும் விதத்தில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் இது அனைத்தையும் மறந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார் வனிதா.

vanithaa

மேலும் பிக் பாஸ் பற்றிய கருத்துக்களை அவ்வப்போது தனது யூடுப் பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில் பாலாஜி சனம் ஷெட்டியை அவதூறாக பேசியதை பற்றி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பாலாஜியை கன்னாபின்னா வென்று கிழித்திருந்தார். அவனை நேரில் பார்த்தால் செருப்பால அடிப்பேன் என்றும் கூறியிருந்தார். இதற்கு பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் பதிலடி தரும் விதத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ravindar and vanitha

அந்த வீடியோவில் ஏற்கனவே சில பேர் பிக் பாஸ் வீட்டிற்கு போகாமலே அதை பற்றி பேச கூடாது இதற்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறினார்கள். தகுதியோடு பேசுறோமோ (இல்லை) தகுதி இல்லாமல் பேசுறோமா என்பது முக்கியமில்லை. தண்ணி அடிக்காம பேசணும் என்று கூறியிருந்தார். மேலும் எதுக்கு ரிவியூ கொடுத்தாலும் தண்ணி அடிக்காம கொடுங்க இதன் என் கருத்து என்று கூறி பங்கமாக கலாய்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here