பணம் டிரான்ஸ்பர் செய்ய இனி ‘வாட்ஸ் ஆப்’ போதும் – எளிய வழிமுறைகள் இதோ!!

0

வாட்ஸ் ஆப் மூலம் நாம் அனைவரும் சாட் மட்டும் தான் செய்து கொண்டிருந்தோம். தற்பொழுது வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதி இந்தியாவில் தொடங்கி உள்ளது. இதன் மூலம் எப்படி பணம் டிரான்ஸ்பர் செய்வது?? பற்றிய முழு விவரத்தை இப்பதிவில் காணலாம்.

வாட்ஸ் ஆப்:

வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்புவது மிகவும் எளிமையான ஒன்றாகும். இதற்கு சில எளிய முறைகள் இருக்கிறது. இதன் மூலம் பொருளாதார செயல்பாடுகளிலும் வாட்ஸ் ஆப் இறங்கி உள்ளது. இந்த வசதியை என்.பி.சி.ஐ உடன் இணைந்து வாட்ஸ் ஆப் வடிவமைத்துள்ளது. இந்த வசதியை பெற முதலில் வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். பின் அதை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு கண்டிப்பாக டெபிட் கார்டு வைத்திருக்க வேண்டும். வங்கி கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள நம்பர் மற்றும் வாட்ஸ் ஆப் ஓபன் செய்த நம்பர் கட்டாயமாக ஒன்றானதாக இருக்க வேண்டும்.

எளிய வழிமுறைகள்:

வாட்ஸ் ஆப் ஓபன் செய்த உடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை தொடவும். அதில் பெமென்ட் என்ற வசதி இருக்கும். அதை கிளிக் செய்தால் அனைத்து வங்கிகளின் பெயரும் அதில் வரும். அதில் உங்களுடைய வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு யூபிஐ பின் கேட்கும் அதை கொடுத்தால் பணம் ஷேர் ஆகி விடும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

யூபிஐ பின் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால் உடனே ஓபன் செய்து விடலாம். இல்லையென்றால் உங்கள் டெபிட் கார்டு கடைசி 6 நம்பரை வைத்து ஓபன் செய்ய வேண்டும். இதை வைத்து நாம் கடைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்றால் கடைக்காரரின் வாட்ஸ் ஆப் நம்பர் உங்கள் போனில் சேவ் செய்யவேண்டும். பணம் சென்ற பின் நமக்கு மெசேஜ் வரும். வாட்ஸ் ஆப் QR code மூலமாகவும் ஷேர் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here