பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் ஷிவானியின் முன்னாள் காதலன் – பாலாஜி காதல் வெற்றி பெறுமா??

0

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல முக்கோண காதல் கதைகளும் அரங்கேறி வருகிறது. தற்போது மற்றுமொரு புதுவராவாக ஷிவானியுடன் கிசுகிசுக்கப்பட்ட அசீம் வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4

இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ஸ்பெஷல் என்றே சொல்லலாம். ஏனெனில் மக்கள் பலரின் தொடர் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பானது. மேலும் இப்பொழுது தான் ஆரம்பித்தது போல இருந்த பிக் பாஸ் தொடங்கி 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே பல சண்டைகளை ஏற்படுத்தினார் அனிதா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

bigg boss

ஆனால் தற்போது இருந்த இடம் கூட தெரியாமல் உள்ளார். அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நாளில் இருந்து தொடர்ந்து பல சண்டைகள் உருவாகியுள்ளது. போதாத குறைக்கு சுஜித்ரா வேறு. கண்டபடி போட்டியாளர்களிடம் போட்டு கொடுத்து சண்டையை ஏற்படுத்தி வருகிறார்.

bigg boss

இந்நிலையில் பாலாஜி பிரச்சனைகள் வேறு பரவி வருகிறது. இந்த வாரம் கமல் வந்தால் தான் இதற்கு முடிவும் கிடைக்கும். இந்நிலையில் பாலாஜி மற்றும் ஷிவானி இடையே காதலும் மலர்ந்து வருகிறது. ப்ரோமோ கூட இவர்கள் இல்லாமல் வெளிவருவதில்லை. இப்பொழுது ஸ்டேட்டஸ் கூட ஷிவானி பாலாஜி டான்ஸ் தான்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதுவரவாக பகல் நிலவு ஹீரோ அசீம் வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஷிவானி உடன் இணைந்து 2 சீரியலில் நடித்தவர். மேலும் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகின. இந்நிலையில் இவர் உள்ளே வந்தால் மேலும் களைகட்ட அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here