Sunday, May 12, 2024

நவம்பர் 23 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

Must Read

மத்திய அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளதை அடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 23 ஆம் தேதி முதல் 50 சதவீத மாணவர்களுடன் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவியதால் நாட்டு மக்கள் நலன் கருதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவில்லை. கல்வி ஆண்டு துவங்கி பல மாதங்கள் முடிவுற்ற நிலையிலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியும், பல மாநில அரசுகள் கொரோனா பரவல் அச்சம் மற்றும் மாணவர்களின் உடல் நலன் கருதி அது குறித்து முடிவெடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்று வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறந்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது. இதனை குறிப்பிடும் போது கூடுதலாக, மாநில அரசு தங்களது மாநிலங்களில் உள்ள சூழலை பொறுத்து கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவினை எடுக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து பல மாநிலங்கள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தது.

கல்லூரிகள் திறப்பு:

தற்போது உத்தர பிரதேச அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் நவம்பர் 23 ஆம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கான நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

50 சதவீத மாணவர்களுடன் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கல்லூரிகளுக்கு வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -