சபரிமலை ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய போறீங்களா?? அப்போ இத மிஸ் பண்ணாம படிங்க!!

0

ஐயப்ப பக்கதர்களுக்கு சில முக்கிய குறிப்புகள். கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது சுவாமி ஐயப்பன் தரிசனம் தான். மாத தொடக்கத்திலேயே மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதமிருந்து இருமுடி கட்டி மலைப்பாதைகளை கடந்து ஐயப்ப தரிசனம் காண செல்லுவார்கள். இந்த ஆண்டு கொரோனா காரணத்தால் சில விதிமுறைகள் விதிக்கபட்டுள்ளன. அவை என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

ஐயப்ப பக்தர்களுக்கு சில விதிமுறைகள்:

கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து இருமுடி கட்டி கடுமையாக 48 நாட்கள் விரதமிருந்து இருந்து கரடுமுரடான மலைப்பாதைகளை கடந்து வேண்டுதல்களை செலுத்துவதற்காகவும், ஐயப்பனை கண்ணார கண்டு நெய் அபிஷேகம் செய்யவும் வருட வருடம் பல லட்சம் மக்கள் செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக சில விதிமுறைகள் விதிக்கபட்டுள்ளன.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில வருடங்களாக பெண்களும் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்ற போராட்டதிற்கு பிறகு இறுதியாக உச்சநீதிமன்றம் பெண்கள் செல்ல அனுமதி அளித்தது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐயப்ப பக்தர்களுக்கு எப்படி தரிசனத்திற்கு செல்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். அதற்கு சில வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பக்கதர்கள் முதலில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கோவிலுக்கு செல்வதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று வந்தால் பரிசோதனை செய்த 24 மணி நேரத்திற்குள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கபட்டுள்ளது. 24 மணிநேரத்திற்குள் செல்ல முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். நிலக்கல்லில் ரூ.625 செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனை செய்த அரைமணி நேரத்தில் சான்றிதழ்கள் கிடைத்து விடும்.

வாரத்தில் வேலை நாட்களுக்கு ஆயிரம் பேரும் & சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் இரண்டாயிரம் பேரும் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கார் போன்ற வாகனங்களில் செல்லும் பக்தர்கள் பம்பை வரை மட்டுமே செல்ல அனுமதிக்கபட்டுள்ளது. காரில் செல்லும் பக்கதர்கள் கூட்டமாக செல்லாமல் 3 மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், அதிகமாக செல்லும்பொது யாரேனும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here