Tuesday, April 30, 2024

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு – மாணவர்கள் மகிழ்ச்சி!!

Must Read

முதுகலை பட்டப்படிப்பு மட்டும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இன்று 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கல்லூரிகள் திறப்பு:

நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி 8 மாதங்கள் ஆன நிலையில் தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை திறக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்த முடியாது என்ற காரணத்திற்காகவும், அவர்களது வேலைவாய்ப்பினை கருத்தில் கொண்டும் இன்று தமிழகத்தில் அவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று முதுகலை அறிவியல், தொழில்நுட்ப பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று கல்லூரிகளுக்கு வந்துள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் இதர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மிருதுவான மற்றும் மென்மையான கூந்தலை பெற வேண்டுமா?? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!!

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி இறுதி ஆண்டு படிக்கும் இளங்கலை மாணவர்களுக்கு கல்லூரிகள் அறிவித்துள்ளபடி திறக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மாணவர்களுக்கான விடுதிகளும் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு கல்லூரிகளுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

6000+ காலிப்பணியிடங்கள்.., இதை செஞ்சா கைநிறைய சம்பளத்துடன் வேலை.., உடனே முந்துங்க!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 4 தேர்வு ஜூன் 9 தேதி நடத்தப்பட உள்ளது. 6244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில் லட்சக்கணக்கான தேர்வர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -