தன்னை விட 20 வயது குறைந்த பெண் – 2வது திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்..!

0

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

சினிமா துறை பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 40 நாளுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் மட்டும் 20 நபர்களுக்கு மிகாமல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் சினிமா துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விதமான ஷூட்டிங்கும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

சினிமா துறையில் ஏற்பட்டு உள்ள பாதிப்பால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். திரையரங்குகளுக்கு மூடப்பட்டு உள்ளது. தற்போது சில தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளதால் படங்களின் போஸ்ட் புரடொக்சன் வேலைகள் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரனான தில் ராஜு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

ஃபிடா, நேனு லோக்கல், யவடு, தில், சதமானம் பவதி, ஜானு போன்ற படங்களை இவர் தயாரித்து உள்ளார். இவர் தயாரித்த சதமானம் பவதி திரைப்படம் தேசிய விருது பெற்று உள்ளது. இவரது முதல் மனைவி 2017ம் ஆண்டு மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here