சின்னத்திரையில் ‘சித்தி 2’ செய்த சாதனை – வாழ்த்தும் ரசிகர்கள்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் புதிய சாதனை ஒன்றை செய்து அசத்தியுள்ளது. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சித்தி

சன் டிவியில் சித்தி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இரண்டாவது சீசன் சக்கை போடு போட்டு வருகிறது. கவின் வெண்பா ஜோடி மக்கள் மத்தியில் இடம் பிடித்தும் விட்டனர். மேலும் புது வரவாக கவின் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நவீன் தாய் பாசத்திற்காக இங்கு வந்து தங்கி இருக்கிறார்.

chithi 2

அதோடு யாழினியை வேறு நவீனுக்கு பிடித்தும் போனது. யாழினி சாரதா மகள் தான் என்ற உண்மை எப்பொழுது தெரிய வரும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். மேலும் கவினின் அப்பாவும் அம்மாவும் எதற்காக பிரிந்தார்கள் என்ற விஷயமும் இன்னும் சொல்லப்படவில்லை. நவீன் என்ற பையன் இருப்பது கவின் அம்மாவுக்கு தெரியுமா தெரியாதா?? என்பதே ட்விஸ்டு தான்.

இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் சித்தி 2 ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பித்த சில மாதங்களிலேயே இந்த அளவுக்கு ரீச் என்றால் அது பெரிய விஷயம் தான். இப்படி இருக்க தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் அந்த சீரியலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here