கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி – தமிழக கால்நடைத்துறை எச்சரிக்கை!!

0

கேரளாவில் தற்போது கோழிகள் மற்றும் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வரும் கோழிகளை ஏற்றிக்கொண்டு வரும் லாரிகளை தமிழகத்திற்குள் செல்ல அனுமதிக்க கூடாது எனவும் தமிழகத்தில் பண்ணைகளை கண்காணிக்கவும் கால்நடைத்துறை உத்தரவிட்டுள்ளது.

பறவை காய்ச்சல்:

தற்போது தான் கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. அதற்குள் புதிதாக ஒன்று பரவ தொடங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகள் இறந்து கிடந்தன. தற்போது அந்த இறந்த வாத்துகளில் இருந்து மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டது. தற்போது அதற்கான முடிவுகள் வந்துள்ளது. இறந்து மடிந்த வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கால்நடைதுறை எச்சரிக்கை:

கேரள எல்லையில் இருக்கும் தமிழக மாவட்டங்களுக்கு கால்நடைத்துறை செயலாளர் ஞானசேகரன் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை உள்ள எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் கோழிப்பண்ணைகளை கவனமாக பார்வையிட்டு வரவேண்டும். கோழிப்பண்ணைகளில் ஏதேனும் அறிகுறி தெரிந்தால் உடனே கால்நடைத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். மேலும் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி கட்டாயமாக தெளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – பெற்றோர்களின் கருத்து இது தான்!!

மேலும் கேரளாவில் இருந்து இறைச்சி, கோழி, முட்டை மற்றும் அது சார்ந்த பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் பறவை காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குறிப்பிட்ட பகுதிகளில் அனைத்து கோழிகள் மற்றும் வாத்துகளை கொல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரியானா மற்றும் இமாச்சலப்பிரதேஷ் மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி ஏராளமான கோழிகள் உயிர் இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here