#INDvsAUS டெஸ்ட் போட்டி – கே.எல்.ராகுல் விலகல்!! ஆட்டம் காணும் இந்திய அணி!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னியில் வைத்து தொடங்குகிறது. தற்போது இந்தியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது இந்தியா அணியை சற்று பலவீனபடுத்தும் என்றே தெரிகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட் தொடரை பங்கேற்க உள்ள இந்த அணிகள் ஏற்கனவே 2 போட்டிகளை விளையாடி முடித்துள்ளார்கள். அந்த இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளார். தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையே 3 வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னியில் வைத்து தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா அணி வீரர்கள் பலர் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். கேப்டன் விராட்கோஹ்லி தனது மனைவி பிரசவ காலம் என்பதால் அவர் நாடு திரும்பியுள்ளார். எனவே தற்போது இந்தியா அணியை ரஹானே வழி நடத்தி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்தியா அணியின் வேக பந்து வீச்சாளர் ஷமி காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யதேவும் காயம் காரணமாக விலகியுள்ளார். முன்னணி வீரர்கள் சற்று குறைவாக உள்ளதுபோல் இந்தியா அணி காட்சியளிக்கிறது. தற்போது நாளை போட்டி துவங்க இருக்கும் நிலையில் மற்றொரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி – தமிழக கால்நடைத்துறை எச்சரிக்கை!!

இந்தியா அணியின் நட்சத்திர பேஸ்ட்மேன் கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். பயிற்சியின் போது அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த காயம் குணமாகுவதற்கு சுமார் 3 வார காலம் ஆகும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் இந்தியா திரும்ப உள்ளார். இங்கு வந்து பெங்களுருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிகிச்சை பெறவுள்ளார் என்பது போல் தெரிகிறது. எனவே மீதமுள்ள மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here