Thursday, May 2, 2024

திரைப்படமாகும் செஸ் உலகின் “ஜாம்பவான்” விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை- இவர் தான் இயக்குனராம்!!

Must Read

செஸ் உலகின் ஜாம்பவானாக தற்போது வரை வலம் வரும் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்கை வரலாறை திரைப்படமாக எடுக்க முடிவெடுத்துள்ளனர். இந்த படத்தை இந்தி பட இயக்குனரான ஆனந்த் எல் ராய் என்பவர் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்:

சென்னையில் பிறந்து செஸ் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறு வயதிலேயே செஸ் உலகிற்கு பெருமை சேர்த்தவர், விஸ்வநாதன் ஆனந்த். 6 வயதில் செஸ் விளையாடுவதில் ஆர்வம் மற்ற குழந்தைகளை விட அதிகமாக உள்ளது என்று அறிந்த அவரது பெற்றோர்கள் அவரை பயிற்சி செய்ய உதவி, அவர் தோல்வி அடையும் போது ஊக்குவித்து, அவரை மாபெரும் மேடைகளில் வெற்றி அடைய வைத்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது தந்தை மீது உள்ள அலாதி பற்று காரணமாக ஆனந்த் தனது தந்தையின் பெயரான விஸ்வநாதன் என்பதை முதலில் வைத்து கொண்டார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐந்து பேரில் ஆனந்த் ஒருவர். சதுரங்க உலகில் “கிராண்ட்மாஸ்டர்” ஆவார். தற்போது அவர் செஸ் உலகில் தன்னை போல் உள்ள சிறுவர்களுக்காக செஸ் அகாடமி “WestBridge Anand Chess Academy” என்ற பெயரில் திறக்கவுள்ளார்.

ரெட்மி கே40 & கே40 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு எப்போது??

இப்படியான இவரது வாழ்க்கையை படமாக்க இந்தி இயக்குனரான ஆனந்த் எல் ராய் என்பவர் இயக்க உள்ளார். இவர் “தணு வெட்ஸ் மனு”, “ராஞ்சனா” போன்ற படங்களை இயக்கியவர். தற்போது தனுஷ் மற்றும் சாரா அலி கான் நடிக்கும் “அத்ரங்கி ரே” என்ற திரைப்படத்தி இயக்கி வருகிறார். இவர் தான் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கையை படமாக இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் 2021 ஆம் ஆண்டு வெளி வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது இந்த படத்திற்கான முதல் கட்ட வேலைகள் ஆரம்பித்துள்ளன. நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இறுதி செய்யப்படவில்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -