#CSKvsKKR ஐபிஎல் போட்டி – வெற்றியை கைப்பற்றுமா சென்னை??

0

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன.

சென்னை vs கொல்கத்தா:

இந்த தொடரை தோல்வியுடன் தொடங்கி அடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த ஆண்டு இந்த அணி வெளிப்படுத்திய மோசமான ஆட்டத்தினால் ரசிகர்கள் அனைவரும் சோகமடைந்த நிலையில் இந்த ஆண்டு சென்னை அணி அதிரடியான காம்பேக்கை கொடுத்துள்ளனர். இதனால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

IPL 2021: KKR vs CSK – Dream11 Fantasy Playing XI

அதேபோல் சென்னை அணியில் தற்போது பந்துவீச்சாளர்கள் அனைவரும் செம பார்மில் உள்ளனர். வேக பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின் என இரு துறையிலும் வீரர்கள் கலக்கி வருகின்றனர். ஆனால் பேட்ஸ்மேன்கள் அனைவரும் மிக பெரிய அளவில் சொற்பிக்காதது சற்று வருத்தத்திற்குரியதே. எனவே சென்னை அணி இன்றைய போட்டியில் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கிய கொல்கத்தா அணி அடுத்த விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சம பலமாக காணப்படுகிறது. ஆனால் அதில் வீரர்கள் யாரும் பெரிய அளவில் சொற்பிக்கவில்லை. எனவே இன்றைய போட்டியில் வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டால் சென்னை அணிக்கு கண்டிப்பான முறையில் நெருக்கடி கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ஐசிசி டி 20 உலக கோப்பை – போட்டி நடைபெறும் மைதானங்கள் பற்றிய விவரம்!!

இந்த இரு அணிகளும் இதுவரை 23 முறை மோதியுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை அணி 14 முறையும் கொல்கத்தா அணி 8 முறையும் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது. 1 போட்டிக்கு மட்டும் முடிவு கிடைக்கவில்லை. இரு அணிகளும் சமபலத்துடன் காணப்படுவதால் இந்த போட்டி மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here