யம்மியான “லெமன் பெப்பர் சிக்கன்” ரெசிபி – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

0

சிக்கனில் நல்ல சத்து அவ்வளவாக இருப்பதில்லை என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், உடலுக்கு தெம்பு அளிக்கும் பல சத்துக்கள் இருக்கின்றது. இன்று சிக்கனை வைத்து வித்தியாசமான “லெமன் பெப்பர் சிக்கன்” ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 500 கிராம்
  • தயிர் – 100 கிராம்
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  • பெப்பர் – 2 டீஸ்பூன்
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மல்லித்தழை – தேவையான அளவு
  • ஏலக்காய் – 2
  • கிராம்பு – 3
  • மிளகு – 10
  • பட்டை – 2
  • பிரியாணி இலை – 1
  • இஞ்சி மற்றும் பூண்டு – 3 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 4
  • சோள மாவு – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • வெண்ணை – 2 டீஸ்பூன்

செய்முறை

முதலில், சிக்கனை ஊற வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிக்கன், எலுமிச்சை சாறு, பெப்பர், தயிர், இஞ்சி & பூண்டு விழுது, உப்பு மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை முதலில் சேர்க்க வேண்டும். நன்றாக அதனை பிசைந்து கொள்ள வேண்டும். பின், இந்த கலவையை 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பின், காடாயை காய வைக்க வேண்டும். அதில் ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு, கிராம்பு மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

கண்ணம்மாவிற்கு விஷ ஊசி போட்ட விஷயத்தை கண்டுபிடித்து விடும் பாரதி – சிக்குவாரா வெண்பா??

இவை நன்றாக வதங்கியதும், அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு, எடுத்து வைத்துள்ள சிக்கனை சேர்க்க வேண்டும். அதனை அப்படியே மூடி வைத்து விட வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து இதில் சோள மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக, வெண்ணை, பச்சை மிளகாய் (கீறியது) மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து கிண்டி விட வேண்டும். பின், அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அவ்ளோ தான்!!

யம்மியான “லெமன் பெப்பர் சிக்கன்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here