ஐசிசி டி 20 உலக கோப்பை – போட்டி நடைபெறும் மைதானங்கள் பற்றிய விவரம்!!

0

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆண்கள் டி 20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் உள்ள சென்னை, கொல்கத்தா உட்பட 9 நகரங்களில் நடைபெறவுள்ளது.

டி 20 உலக கோப்பை:

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக விளையாட்டு துறை முழுவதும் முடங்கியது. இதன் காரணமாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆண்களுக்கான டி 20 உலக கோப்பை தொடர் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி முதல் நவம்பர் மாதம் 15ம் தேதி வரை உலக கோப்பை தொடரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா நோய்த்தொற்று இதனை நடத்த விடாமல் செய்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ஆண்களுக்கான டி 20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றிற்கு மத்தியில் மிக சிறப்பாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் முடிந்ததும் அடுத்ததாக அனைவரின் கவனமும் உலக கோப்பை தொடரை நோக்கி திரும்பும்.

மருமகளுடன் இணைந்து பாக்கியலட்சுமி சீரியல் நடிகை செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!!

அந்த வகையில் உலக கோப்பை தொடருக்கான பணிகளை தற்போது பிசிசிஐ தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பிசிசிஐ டி 20 உலக கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்கள் பற்றிய விவரத்தை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை உட்பட 9 நகரங்களில் உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளது.

9 நகரங்கள்

  • மும்பை
  • சென்னை
  • அஹமதாபாத்
  • தர்மசாலா
  • டெல்லி
  • ஐதராபாத்
  • கொல்கத்தா
  • லக்னோ
  • பெங்களூரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here