ஆபத்தில் சென்னை மாநகரம் – பணிகளை நிறுத்தப் போவதாக அரசு மருத்துவர்கள் அறிவிப்பு..!

0

சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மற்றும் அதன் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள அரசு மருத்துவர்களுக்கு உரிய தங்குமிடம், உணவு உட்பட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா சிகிச்சை:

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை தான் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததால் கொரோனா தொற்று ஏற்படுகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி டீனுக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

கடந்த ஒரு மாதமாக நாங்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பணியில் அமர்த்தப்பட்டுள்ளோம். முதுமலை மருத்துவர்கள் ஏழு பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளது. மோசமான ஏற்பாடுகளால் எங்களுக்கு கொரோன தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. கடந்த 16ஆம் தேதி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று சில விதிமுறைகளுடன் ஐசிஎம்ஆர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால், அதன்படி இன்னும் எந்த வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று நேற்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.

இதில் இருந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களின் நலனில் எந்தளவிற்கு அரசு அக்கறையின்றி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஆதலால், இன்று மதியம் 3.30 மணியில் இருந்து அனைத்து வகையான கொரோனா பணிகளிலும் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ள இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

முதல்வர் உத்தரவு:

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தான் அதிகளவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்களின் இந்த அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி ஏற்பபட்டு உள்ளது. இதையடுத்து மருத்துவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக முதல்வர் அவர்கள் தெரிவித்து உளளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here