10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? எங்கு நடைபெறும்? வெளியான தகவல்கள் இதோ..!

1

தற்போது நாடெங்கிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததோடு 1ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 10 ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது 10 வகுப்பு தேர்வுகள் நடந்தால் அந்த அந்த பள்ளிகளிலே நடத்த கோரி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

No blueprint ahead of exams for TN State Board class 10 students ...

கொரோனவால் பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 20-ம் தேதி முதல் 10-வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு அட்டவணை வெளியானதால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வுகள் நடைபெற்றால் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கோரிக்கை

அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது,“கொரோனா வைரஸ் மனிதகுலத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் மார்ச் 24 தேதி முதல் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்து மே 3ம் தேதி வரை நீட்டித்து நடைமுறையில் உள்ளநிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளது. பெற்றோர்கள் கல்வியாளர்கள் மற்றும் பல அமைப்புகள் இதனை ரத்து செய்ய கேட்டுக் கொண்டனர் , தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லும் முக்கியத் தேர்வு என்பதால் ரத்து செய்ய முடியாது என்று அறிவித்து தேர்வை ஒத்திவைத்துள்ளது.

PIL plea to defer SSC exams - The Hindu

இதற்கிடையில் மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி ஊரடங்கு முடிந்தவுடன் வெளியிடப்படும். தேர்வு ஒருநாள் விட்டு ஒருநாள் நடைபெறும் என்றும் தெரிவித்து இருக்கின்றார்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை விரிவு படுத்த வேண்டும் அதாவது சமுக விலகலை கடைப்பிக்க வேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆதலால் மாணவர்கள் , ஆசிரியர்கள் அலுவலக பணியார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மாணவர்கள் பயிலுகின்ற பள்ளிகளிலேயே தேர்வை நடத்தவேண்டும்.

Live Chennai: 10th Standard Public exam on language will be in the ...

பல மையங்களில் ஐந்து ஆறு பள்ளி மாணவர்கள் ஒரே மையத்தில் எழுதுவார்கள். இதனால் சமுக விலகலை கடைப்பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது. போக்குவரத்துச் சிரமமும் உள்ளது. ஆதலால் தேர்வு மையங்களை விரிவுப்படுத்தி மாணவர்கள் நலன் கருதி அவர்கள் பயிலுகின்ற பள்ளிகளிலேயே தேர்வுகளை எழுத அனுமதித்து உத்தரவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

  1. மக்களையும் மாணவர்களையும் குழப்புவதுதானே எங்கள் பொற்கால ஆட்சி.
    .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here