துணிவு பட அஜித்தை போல் வங்கி பணத்தை திருடிய நைஜீரியர்கள்.., டெல்லியில் வளைத்து பிடித்த காவல்துறை!!

0
துணிவு பட அஜித்தை போல் வங்கி பணத்தை திருடிய நைஜீரியர்கள்.., டெல்லியில் வளைத்து பிடித்த காவல்துறை!!
துணிவு பட அஜித்தை போல் வங்கி பணத்தை திருடிய நைஜீரியர்கள்.., டெல்லியில் வளைத்து பிடித்த காவல்துறை!!

துணிவு பட பாணியில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை ஹேக் செய்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கிக் கொள்ளை:

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் நூதன முறையில் பணத்தை திருடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் பிரபலமான தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமையகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வங்கி கணக்கில் இருந்து கடந்த நவம்பர் மாதம் கிட்டத்தட்ட 2.61 கோடி மாயமாகி உள்ளது. அந்த பணம் எப்படி மாயமாகி போனது என்று வங்கியாளர்கள் குழப்பத்தில் இருந்து வந்துள்ளனர். அதன் பின்னர் காவல் துறையிடம் வங்கி பணியாளர்கள் புகார் அளித்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் மிகத் தீவிரமாக விசாரித்து வந்தனர். விசாரணையின் போது வங்கிக்கு கீ லாக்கர் என்ற ஒரு மெயில் வந்துள்ளது. அந்த மெயிலை வங்கியாளர்கள் ஓபன் செய்து பார்த்துள்ளனர். அந்த மெயிலை ஹேக்கர் அனுப்பியது என்று தெரியாமல் ஓபன் செய்து பார்த்துள்ளனர். அந்த வேலையில் வங்கியின் கணினி கட்டுப்பாடு ஹேக்கர் கை வசம் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து வங்கியின் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்ஸ் கணக்கிலிருந்து 2.61 கோடி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

அஜித்தின் ஹிட் பட நாயகி சீரியலில் இவளோ அவஸ்தைப்படுறீங்களா?? அடக்கடவுளே இந்த நிலைமை ஆகிடுச்சே!!

இந்நிலையில் கொள்ளை அடித்த கும்பலை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டெல்லி உத்தம் நகரில் தலைமறைவாக இருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவரை சென்னை குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் அஜித் வங்கி கணக்கை திருடு பாணியில் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here