ராதிகாவின் அந்த விஷயத்தால் புலம்பும் கோபி., ஈஸ்வரிடம் வசமாக சிக்கிய பாக்யா! அனல் பறக்கும் எபிசோட்ஸ்!!

0
ராதிகாவின் அந்த விஷயத்தால் புலம்பும் கோபி., ஈஸ்வரிடம் வசமாக சிக்கிய பாக்யா! அனல் பறக்கும் எபிசோட்ஸ்!!
ராதிகாவின் அந்த விஷயத்தால் புலம்பும் கோபி., ஈஸ்வரிடம் வசமாக சிக்கிய பாக்யா! அனல் பறக்கும் எபிசோட்ஸ்!!

விஜய் டிவியில், விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரின், இன்றைய தொடக்கத்தில் பாக்கியா கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஜெனி வந்து பாக்கியாவிடம் இனிமே அடிக்கடி பார்லருக்கு போகலாம் என்று சொல்கிறார். அதுக்கு பாக்கியா அதுலாம் வேணாம் ஜெனி, செலவாகிடும்னு சொன்னதும், ஜெனி பாத்துக்கலாம் ஆண்ட்டி நீங்க கண்ணாடியை பார்த்து ரசிங்கனு சொல்லிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்பு கோபி phoneயை பாத்து ஷாக் ஆகி கத்துகிறார். அப்போது ராதிகாவை கூப்பிட்டு என் கார்டுல இருந்து யாரோ 16,000 எடுத்துருக்காங்க, யாருன்னு தெரியலன்னு சொல்லி கத்துகிறார். அப்போது ராதிகா நான்தான் கோபி பார்லர்க்காக எடுத்தேன் என்று சொன்னதும், உடனே கோபி மனசுக்குள்ளேயே புலம்புகிறார். பின்பு ராதிகா நான் பார்லர்ல பாக்கியாவை பாத்தேன்னு சொன்னதும் கோபி அவலாம் அங்கு வரத்துக்கான வாய்ப்பே இல்லை என்று சொல்கிறார் . உடனே ராதிகா நான் அவங்களைத்தான் பாத்தேன், அவுங்க ரொம்ப ஸ்டைலா மாறிட்டாங்க? என சொல்லிவிட்டு உள்ள சென்று விடுகிறார்கள். பின்பு கோபி பாக்கியவை நல்லவேளை நான் அங்கு இருக்கும் போது பாக்கியா இப்டி பார்லருக்கு எல்லாம் போக முடிவெடுக்கவில்லை என நினைத்துக் கொண்டே, ராதிகா 16000 செலவு பண்ணது நினைச்சு புலம்பிக்கொண்டே திரிகிறார்.

துணிவு பட அஜித்தை போல் வங்கி பணத்தை திருடிய நைஜீரியர்கள்.., டெல்லியில் வளைத்து பிடித்த காவல்துறை!!

அப்புறம் பாக்கியா எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கும் போது, செழியனும், எழிலும் அம்மா உன் முகம் இன்னைக்கு வித்தியாசமா இருக்கே? என்று சொல்கிறார்கள் . அப்போது ஈஸ்வரி இதைத்தான் நானும் அப்போ இருந்து கேக்குறேன் , அவ எதோ பண்ணிட்டு வந்திருக்கான்னு சொல்கிறார். பின்பு எல்லோரும் சாப்பிட்டு விட்டு சென்றுவிடுகிறார்கள்.

பின்பு பாக்கியா எழிலிடம் மட்டும் உண்மையா சொல்கிறார்கள் , அப்போது பாக்கியா எழில் கிட்ட பேசுவதை ஈஸ்வரி கேட்டுவிட்டு பாக்கியவை திட்டி தீர்த்துவிடுகிறார். அப்போது எழிலும் ,ஜெனியும் பாக்கியாவிற்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள். அதன் பின்பு ஈஸ்வரி திட்டியத்தை நினைத்து பாக்கியா ரொம்ப அழுது கவலைப்பட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here