உலக கோப்பையில் சதத்தை மிஸ் செய்த கம்பீருக்கு தோனி சொன்ன விஷயம் இது தான்…, மலரும் நினைவுகளை பகிர்ந்த நட்சத்திரம்!!

0
உலக கோப்பையில் சதத்தை மிஸ் செய்த கம்பீருக்கு தோனி சொன்ன விஷயம் இது தான்..., மலரும் நினைவுகளை பகிர்ந்த நட்சத்திரம்!!
உலக கோப்பையில் சதத்தை மிஸ் செய்த கம்பீருக்கு தோனி சொன்ன விஷயம் இது தான்..., மலரும் நினைவுகளை பகிர்ந்த நட்சத்திரம்!!

ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை தொடரானது இந்த வருடம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த ஒரு நாள் உலக கோப்பையை வெல்வதற்காக சர்வதேச அணிகள் அனைத்தும், வருடத்தின் முதல் பக்காவான போட்டிகளை தயார் செய்து திட்டமிட்டுள்ளது. இதன்படி, இந்திய அணியும், தற்போது இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு எந்த ஒரு பெரிய தொடரையும் வெல்லாததால், உலக கோப்பைக்கான ஏக்கம் ரசிகர்களிடையே அதிக எழுந்து வருகிறது. இந்த 2011 ஆம் ஆண்டின் உலக கோப்பை இறுதி போட்டியில், தோனி வெற்றி சிக்ஸர், கவுதம் கம்பீரின் (97) ரன் வேட்டை உள்ளிட்ட பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை யாராலும் மறக்க முடியாது.

பும்ராவுக்கு ஐபிஎல் விளையாடுவதே இலக்கா?? அப்போ இந்திய அணிக்கு திரும்புவது எப்போது??

இந்நிலையில், இந்த உலக கோப்பை குறித்து கம்பீர் சில நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த உலக கோப்பையில் நான் சதம் அடிக்க வேண்டும் என்று தோனி விரும்பினார். அதற்காக என்னை நிதானமாக விளையாடும் படி அறிவுறுத்தினார். ஆனால், நான் தான் சற்று அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்து விட்டேன் என்று கம்பீர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here