தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – பரப்புரைக்காக மீண்டும் தமிழகத்திற்கு வரும் அமித்ஷா!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்சா தமிழகம் வரவுள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று அமித்சா சென்னைக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு வருகை தரும் அமித்சா

இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 2021ம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து முன்னணி கட்சிகளும் தயாராகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக அதிமுக கூட்டணி கட்சியான பாஜக, சட்டசபை தேர்தலில் அதிகபட்ச இடஒதுக்கீடு குறித்து வலியுறுத்தி வருகிறது. அதிமுக இதற்கு மறுத்தநிலையில், பாஜக மற்றும் அதிமுக இடையே குழப்பங்கள் நீடித்துவருகிறது. இத்தகைய சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்சா சென்னை வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்லீவ் லெஸ் உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

தேர்தல் பரப்புரைக்காக அமித்சா சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிப்பங்கீடு, தேர்தல் பரப்புரை குறித்த ஆலோசனையில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித்சாவை தொடர்ந்து தொடர்ந்து மார்ச் 10ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரவுள்ளார் என்பது கூடுதல் தகவல். முன்னதாக, தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் முடிந்த அளவு சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என பிரதமர் மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here