ஸ்லீவ் லெஸ் உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. மேலும் தனது பழைய கொழுக் மொழுக் உடலமைப்பிற்கு மாறிய கீர்த்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கீர்த்தி சுரேஷ்

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமாகி தற்போது பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து தனது நடிப்பு திறனால் மக்கள் மனதில் நிலைத்துள்ளார். தமிழ்நாட்டில் இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உச்சகட்ட நடிகர்களாக திகழ்பவர்கள் பலர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிம்பு, ஷாலினி என பலரும் இன்று வரை நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் அவர்களும் ஒருவர். அவரின் முதல் படம் தோல்வியை தழுவினாலும் அடுத்தடுத்த படங்கள் யாவும் அவருக்கு வெற்றிக்கனியாகவே அமைந்தது.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார் கீர்த்தி. நடிக்க வந்த கொஞ்ச நாளிலேயே விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அந்த அளவிற்கு இவரின் நடிப்பு திறமையும் அழகும் இருந்தது. கீர்த்தி இடம் பிடித்ததே அவரது அந்த கொழுக் மொலுக்கான உடல் தான். திடீரென அவர் அதனை குறைக்கவே அவருக்கு வைப்புகள் கிடைக்காமல் போனது.

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி – அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது!!

இதனால் ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்தனர். மேலும் பல கிசுகிசுக்களிலும் மாட்ட ஆரம்பித்தார் கீர்த்தி. இவரும் காமெடி நடிகரான சதீஷும் இணைந்து இருக்கும் புகைப்படம் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. அதற்கும் கீர்த்தி பதிலடி கொடுத்திருந்தார்.

ஆனால் சமீபத்தில் அனிருத்துடன் கட்டிபிடித்தவாறு இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனால் இருவரும் காதலித்து வருவதாகவும் வதந்திகள் பரவியது. இதற்கு அவரது அப்பாவான சுரேஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கீர்த்தி சுரேஷுக்கு தீவிரமாக மாப்பிள்ளையும் தேடி வருகின்றனர். ஆனாலும் திரையுலகிற்கு முழுக்கு போடாமல் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்திலும், தெலுங்கில் 2 படங்களிலும் கமிட்டாகியுள்ளார் கீர்த்தி.

படத்தின் வெற்றிக்காக ரசிகர்களை கவர தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் கிளோஸப்பில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here