வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்கள் ஊடகங்களில் வெளியீடு – தேர்தல் ஆணையம் உத்தரவு!!

0

ஐந்து மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரம் குறித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்த, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றப்பின்னணி வேட்பாளர்கள்

இந்திய தேர்தல் ஆணைய விதிமுறையின் படி, வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து விளம்பரப்படுத்தும் முறை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் மற்றும் 2020 மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் இதுகுறித்த தெளிவான திருத்தப்பட்ட அறிக்கையை வெளியிட்டது. தற்போது நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தலிலும் தேர்தல் ஆணையத்தின் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரங்கத்தையே அலறவைத்த அனபெல்லா ஷிவாங்கி – வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ ப்ரோமோ!!

அதன்படி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை, நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் மூன்று முறை வெளியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த விவரங்களை அந்தந்த கட்சிகள் அல்லது கட்சியின் வேட்பாளர்கள், ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தகவல் குறித்து, தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் ஆணையருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here