சென்னை உட்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிப்பு..? மத்திய அரசு புதிய திட்டம்..!

0
இந்தியாவில் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ்?? மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!!
இந்தியாவில் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ்?? மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!!

சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து, மற்ற நகரங்களில் புதிய தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து இரண்டு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பொழுதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1.58 லட்சத்தை தாண்டி விட்டது. உயிரிழப்புகளும் கணிசமான அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் நோய்த்தாக்கம் 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

இதனால் 2 மாதங்களுக்கு மேலாக நீட்டிக்கும் ஊரடங்கு உத்தரவால் எவ்வித பயனும் இல்லை என அரசினை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. மேலும் வெளிமாநில தொழிலாளர்கள் அவசர கதியில் ஊர் திரும்பியது, அப்போது நடைபெற்ற சம்பவங்கள் என கொரோனவை விட அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு சிக்கல்கள் நிலவியது. பல மாநிலங்களில் சொந்த ஊர் திரும்பியுள்ள வெளிமாநில தொழிலாளர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர்களை தனிமைப்படுத்தும் பெரும் சுமையை மாநில அரசுகளால் சமாளிக்க இயலவில்லை.

நாட்டில் உள்ள கொரோனா நோயாளிகளில் 70 சதவீதம் பேர் சென்னை உள்ளிட்ட 11 முக்கிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் தான். இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா போன்ற நகரங்களும் அடங்கும். எனவே அங்கு மட்டும் 5ம் கட்ட ஊரடங்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மற்ற நகரங்களில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here