குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மக்களை கட்டாயப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!!

0

குழந்தை பெற்றுக்கொள்வதை குறித்து மக்களை கட்டாயப்படுத்த முடியாது என்று வழக்கின் அடிப்படையில் மத்திய அரசு மனு ஒன்றிற்கு பதில் தெரிவித்துள்ளது. அதே போல் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளும்படி நாம் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகையே பிரச்சனைகளுக்கு காரணம்:

பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர், அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், “இந்தியாவில் பல பிரச்சனைகளுக்கு ஒரே காரணம் மக்கள் தொகை தான். மக்கள் தொகை காரணமாக நாட்டுக்கும் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இப்படியே விட்டால், அதிக மக்கள் தொகையில் கூடிய விரைவில் நாம் சீனாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து விடுவோம். இதன் காரணமாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதை தடுத்திட வேண்டும், அதற்கு தடை விதித்து உத்தரவும் வழங்கிட வேண்டும்” இவ்வாறாக மனுவில் தெரிவித்து இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மனுவிற்கு இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்திருந்தது. அவர்கள் கூறியதாவது, “கடந்த 2000 ஆம் ஆண்டு தேசிய அளவிலான மக்கள்தொகை கொள்கை உருவாக்கப்பட்டது. அதே போல் 2017 ஆம் ஆண்டு தேசிய சுகாதார கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த கொள்கைகளின்படி, வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் சராசரியாக ஒரு தம்பதி குழந்தை பெற்றுக்கொள்வதை 2.1 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது”

மசாஜ் இயந்திரங்கள் வழங்கிய தன்னார்வல தொண்டு நிறுவனம் – மனிதநேயத்துடன் விவசாயிகளின் போராட்டம்!!

“கடந்த 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான மாநாட்டில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. குழந்தை பெற்றெடுக்கும் விகிதம் 3.2 சதவீதமாக இருந்தது, தற்போது 2.2 சதவீதமாக குறைந்துள்ளது. அதே போல் இதனை குழந்தைகள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் கட்டிப்படுத்த முடியாது” இவ்வாறாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here