சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

0

இன்று பெட்ரோல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலை தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

அத்தியாவசிய தேவை:

இன்றைய மக்களின் அன்றாட தேவைகளுள் ஒன்றாகி விட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் இன்றும் மாற்றம் எதுவுமில்லை. கச்சா எண்ணெய் விலை கடந்த மார்ச் மாதத்தில் ரஷ்யாவுக்கும் சவுதி அரேபியாவுக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக கடுமையாக வீழ்ச்சியடைந்தாலும் (பீப்பாய் ரூ.31 முதல் ரூ.36 வரை சரிந்தது) சாமான்ய மக்களுக்கு எந்த வித பலன்களும் இல்லை என்பதே உண்மை.(பெட்ரோல் விலை ரூ..1/ டீசல் விலை ரூ.1.20 மட்டுமே குறைந்தது).

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கச்சா பொருட்களின் விலை சர்வதேச அளவில் உயரும் போதெல்லாம் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நள்ளிரவில் உயர்த்தப்படுகிறது.ஆனால் கச்சா எண்ணெய் விலை குறையும் போது இங்கே விலை குறைப்பு எதுவும் நிகழ்வதில்லை என்பதே உண்மை.

அதிகபட்ச விலை நிலவரம்:

  • ஜுலை / அதிகபட்சம் : பெட்ரோல் ரூ. 83.67 / டீசல் ரூ. 78.27
  • ஆகஸ்ட் / அதிக பட்சம் : பெட்ரோல் ரூ.85.05 / டீசல் ரூ.78.91
  • செப்டம்பர்/அதிகபட்சம் : பெட்ரோல் ரூ.85.09 / டீசல் ரூ.78.91
  • அக்டோபர் /அதிகபட்சம் : பெட்ரோல் ரூ.84.19 / டீசல் ரூ. 76.06
  • நவம்பர் / அதிகபட்சம் : பெட்ரோல் ரூ.85.31 / டீசல் ரூ.77.80

கொரோனா பொது முடக்கம் காரணமாக ஏப்ரல் மாதத்தில் சற்று குறைய துவங்கிய பெட்ரோல் /டீசலின் விலை சுமார் 80 நாட்களுக்கு பிறகு மீண்டும் சிறிது சிறிதாக நாடு இயல்பு நிலை திரும்ப துவங்கியதும் அதிகரிக்க துவங்கியது.(பெட்ரோல் -ரூ.81.82 காசுகள் / டீசல் ரூ.74.77 காசுகள்). இன்றைய விலை நிலவரத்தில் மாற்றம் ஏதுமின்றி நேற்றை போலவே பெட்ரோல் ரூ.86.51 காசுகளாகவும் டீசல் ரூ.79.21 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here